கவிதை பாடும் வண்ணத்துப்பூச்சி குயில்யின் இசையில் நடனமாடும் மலர்கள் அரங்கேற்றம் பசுமையான காட்டில் மாலை வணக்கம்! காடுகள் நாடுகளின் இன்றியமையாதவை! அமேசான் காடுகள் பூமியின் நுரையீரல் போல. பல நாட்களாக அமேசான் காடுகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பது சிலருக்கு தெரிந்திருக்கும். இதனால் உலகில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் அளவிற்கு பிராணவாயு குறைந்துள்ளது. காட்டுத்தீ இயற்கையாகவும் மனிதர்களாகவும் ஏற்படுகிறது. இப்பொழுது அமேசான் காட்டில் இந்த விபத்து நேர்ந்ததற்கு முக்கிய காரணம் பிரேசில் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள், அதன் சார்பாக அழிக்கப்பட்டு வரும் காடுகள், மனிதர்கள் தங்கள் பயன்பாட்டிற்காக மற்றும் நில தேவைக்காக தீ மூட்டுவது - ஆகியவையே இந்த பேரிடருக்கு காரணம்.