Nojoto: Largest Storytelling Platform

அத்யாயம் 2 உப்பற்ற உணவு    இம்தியாஸ் இந்தியாவின் த

அத்யாயம் 2
உப்பற்ற உணவு    இம்தியாஸ் இந்தியாவின் தென்குமரியில் ஓர் மீனவ குடும்பத்தை சேர்ந்தவன். அவனின் தாய் தந்தை இறந்த பின் பிழைப்புக்காக இங்கிருந்து தன் மனைவி மகளுடன் மூன்று வருடம் முன் தான் புலம்பெயர்ந்து கஜகஸ்தான் அல்மாட்டிக்கு சென்றனர். இதற்கு பெரிதும் பணம் திரட்ட உதவியாக இருந்தது அவர்களின் பூர்வீக வீடு தான்...
   கஜகஸ்தானில் நன்றாகவே காலம் சென்றது அவர்களின் தேவைக்கு அதிகமாக சம்பளம். தங்க இடம் உண்ண உணவு என்று 2 வருடம் எந்த பிரச்சனையும் இன்றி இருந்தார்கள்.. 2 வருடம் கழித்து 22 ஜூன் 2000 ஓர் அதிர்ச்சி காத்திருந்தது சட்டென்று சூழல் மாற்றம் உணவு பழகவழக்க மாற்றம் தன் மனைவிக்கு ஆஸ்துமாவை வரவழைத்தது பின் மருத்துவ செலவுக்கு. அவன் பட்ஜெடில் துண்டு விழுந்தது எப்பேர்ப்பட்டாவது நாஜ்மாவை காப்பாற்ற வேண்டும் என்று அல்லும் பகலும் நேரம் பார்க்காமல் உழைத்து பணம் சேமித்தான்..
    எனின் என் செய்ய விதி வலியது. அவனிடமிருந்து அவன் நம்பிக்கையை பறித்தது. ஆம் நாஜ்மா பெரிய கெட்டிக்காரி பணத்தை மிச்சம் செய்வதிலும் குடும்பத்தை அனுசரித்து போவதிலும் கைதேர்ந்தவள்.. அவள் தான் மாமனார் இறந்தபின் வெளி நாட்டுக்கு வேலை செல்ல ஆலோசனை வழங்கினாள். மேலும் அவள் தான் தன் கணவனின் டிப்ளமோ சான்றிதழ் வைத்து கஜகஸ்தானில் வேலையும் வாங்கியும் கொடுத்தாள். 
    அப்போதுதான் சிறு குழப்பம் அவள் குடும்பத்தில். வேலைக்கு இம்தியாஸ் மட்டும் செல்வதில் அவளுக்கு விருப்பமில்லை பாவம் தன் கணவன் தனியாக அங்கே கஷ்டப்படுவானே என்று சிந்தித்தாள் மேலும் அவளுக்கு அங்கே உறவென்று சொல்லிக்கொள்ள பெரிதாக யாருமில்லை எனவே குடும்பத்துடன் புலம் பெயர்ந்தால் என்ன என்று ஆலோசித்தாள்.
    ஆனால் அதில் இம்தியாஸ்க்கு சற்று விருப்பமில்லை. விசா அது இது என்று பெரும் சிக்கல் ஏற்படும் மேலும் அங்கே எப்படி சூழலோ என்றும் தெரியாது.. இவ்வனைத்திற்கும் மேல் அதிக பணம் செலவாகும் என்று ஒரு சராசரி இந்தியனின் அதிலும் நடுத்தர வர்க்கத்தின் ஆண்மகனின் சிந்தனை.
    அப்போது தான் அவள் அந்த வீட்டை விற்கும் யோசனை சொன்னாள். மேலும் அவள் நான் உங்களுடன் வந்துவிட்டாள் அங்கே உணவிற்கு மாத செலவிற்கும் பஞ்சமில்லாமல் குடும்பம் நடத்துவேன் என்று ஆணித்தரமாக சொன்னாள். இதை பற்றி வேறு ஒருவரிடம் ஆலோசனை கேட்கலாம் என்று பார்த்தால் அவனுக்கு சொந்தங்கள் பெரிதாக இல்லை எனவே சக நண்பர்களிடம் கேட்டால் அவர்களுக்கு வெளி நாட்டை பத்தி சிந்தனையில் பெரிதான ஞானமில்லை.
      வேறு வழியின்றி நாஜ்மாவுடன் உடன் பட்டு வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்தனர் அங்கே ஓர் பள்ளியில் கதீஜாவை சேர்த்து படிக்க வைத்தனர். நாஜ்மா சொன்னது போல் குடும்பம் பண்ணி காமித்தாள் ஆதலால் அங்கே சொந்த வீடு வாங்குமளவு பணம் சேர்ந்தது.
    இப்படிப்பட்ட தன் மனைவியை சிந்தித்து கொண்டு அழுதவன் தன் மகளின் பசியை போக்க தன் மனைவி கடைசியாக செய்த உணவினை எடுத்து மகளுக்கு பரிமாறினான். கதீஜாவும் அந்த உணவினை ஆவலுடன் உண்ண அமர்ந்தாள் தன் தாயின் கடைசி சமையல். உண்ண ஆரம்பித்த மறுகணம் போப்பா.. எனக்கு சாப்பாடு வேண்டாம் சாப்பாட்டில் உப்பே இல்லை.. என்றாள்.