Nojoto: Largest Storytelling Platform
nojotouser4257301675
  • 1.8KStories
  • 18.5KFollowers
  • 14.1KLove
    24.2LacViews

இளையவேணிகிருஷ்ணா

நான் ஒரு இணைய வானொலி அறிவிப்பாளர் மற்றும் கலைகளின் ரசனையோடு வாழ்க்கை வாழ விரும்புபவர்.

  • Popular
  • Latest
  • Repost
  • Video
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

White என்ன வேண்டும் என்றாலும் 
நடக்கட்டும்!
நான் எந்த மோசமான சூழலுக்கும் 
அடிமையாகாமல் 
அந்த நொடியில் ஆனந்தமாக 
பயணிப்பவள்!
எந்த மோசமான நிகழ்விலும் ஒட்டாமல் 
பயணிக்கும் வித்தை 
அறிந்தவள் நான்!
இந்த அபாரமான மனநிலையை 
கண்டு காலத்தையே
நடுங்க வைக்கும் வித்தை 
அறிந்தவள் நான்!
நான் இந்த பிரபஞ்சத்தின் 
பேரானந்த பயணி!
என் முன் நீங்கள் எல்லோரும் 
ஒரு சிறு நுண்ணிய துகள்!
#காலை சிந்தனை ✨ 
#இளையவேணிகிரருஷ்ணா.
நாள்:30/10/24/புதன்கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா #diwali_wishes
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

White வாழ்வின் பொக்கிஷம் என்பதெல்லாம் 
நாம் நம்முள்ளே பேரானந்தமாக 
இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு ரசனையோடு பயணிக்கிறோம் என்பதை தவிர 
வேறொன்றும் இல்லை!
விலை மதிக்க முடியாத ஜடபொருட்களில்
நீங்கள் எவ்வளவு தூரம் இன்பத்தை தேடி 
பயணித்தாலும் அதில் உங்களுக்கு 
ஏமாற்றமே மிஞ்சும்!
#காலை சிந்தனை ✨ 
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 27/10/24/ஞாயிற்றுக்கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா #GoodMorning
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

உங்களை உயிர்ப்போடு 
எது வைத்துக் கொண்டு 
இருக்கிறதோ 
அதை ஆனந்தமாக செய்யுங்கள்!
அவ்வளவு தான் வாழ்க்கை!
இதில் பெரிதாக குழப்பிக் கொள்ள 
ஒன்றுமே இல்லை!
#காலை சிந்தனை ✨ 
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 25/10/24/வெள்ளிக்கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா #chaandsifarish
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

White தொலைந்து விட்ட பாதையை 
தேடி பயன் இல்லை...
உருண்டோடி எனை பதம் பார்த்து 
களிப்போடு சிரிக்கும் காலத்தின் 
கேலியிலிருந்து கொஞ்சம் 
எனை விடுவித்துக் கொண்டு 
இங்கே சாலையின் ஓரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இந்த பிரபஞ்சத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள துடிக்கும் 
இந்த மாலை வேளையை 
ஆழ்ந்த அமைதியோடு 
வேடிக்கை பார்த்து 
ஆசுவாசப்படுத்திக் கொண்டு
விடை பெற்று போக துணிந்த கால்களுக்கு 
மட்டும் ஏதோவொரு பாதையை 
காட்டி விட்டு நகர்ந்து விடு என்று
காலத்திடம் 
சொல்ல துடிக்கும் இதழ்களை 
ஏனோ நான் கட்டுப்படுத்தி 
அங்கேயே நிற்கிறேன்...
இருளுக்கும் அந்த சாலைக்கும் 
பெரும் துணையாக இருந்து விட்டு 
போகட்டுமே என்று...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 21/10/24/திங்கட்கிழமை/அந்திமாலை

©இளையவேணிகிருஷ்ணா #sad_dp
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

அனைத்தும் இழந்து விட்ட
பிறகும் ஏதோவொன்று 
என்னோடு என்னை விட்டு 
நீங்க மனமின்றி 
சலனமில்லாமல் 
பயணிக்கிறது...
அது யார் என்று 
சற்றே திரும்பி பார்க்கிறேன் 
நான் தான் பயப்படாதே என்று 
ஒரு ஆதரவு கரத்தை நீட்டி 
புன்னகையோடு 
என்னை இழுத்து செல்கிறது 
அது வேறு யாருமல்ல 
என் தூய நட்பின் சிகரம் 
தைரியம் தான்!..
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா #teatime
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

White The future is not something we enter. The future is something we create." - 
எதிர்காலம் நாம் நுழையும் ஒன்று அல்ல. எதிர்காலம் நாம் உருவாக்கும் ஒன்று.
💫ரத்தன் டாடா 💫

©இளையவேணிகிருஷ்ணா #Ratan_Tata
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

White அந்த பட்டமரத்தின் கவலைகளை 
இங்கே யார் அறியக் கூடும் 
கொடிய விஷத்தை கக்கி 
உயிரோட்டம் நிரம்பிய 
இந்த பிரபஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக 
உயிர் இழக்க செய்யும் மனிதர்களிடையே
அதை கவனிக்க எவரும் இல்லாமல் 
காற்றில் அசைந்தாடி நடனம் ஆடி 
அந்த முழு நிலவின் ஈர்ப்பை பெற்று விட 
அந்த மரம் போராடுவதை பார்த்து 
நிலவும் இரக்கம் கொண்டு 
தனது கிரணங்களால் பெரும் காதல் கொண்டு 
அணைத்துக் கொள்ளும் போது 
உயிர் பிழைத்து ஆனந்தம் கொள்கிறது...
இங்கே உயிரோட்டத்தின் மகத்துவம் 
பெரும் காதலில் உள்ளது என்று 
அந்த மூட மனிதர்கள் அறியமாட்டார்கள் என்று 
இந்த பிரபஞ்சம் ரகசியமாக பேசிக் கொள்கிறது...
#இரவு கவிதை 🍁.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 22/07/24/திங்கட்கிழமை.
முன்னிரவு 8:54.

©இளையவேணிகிருஷ்ணா #moon_day
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

White எதிர் மறை சிந்தனை உடையவர்களிடம்
உங்கள் உரையாடலை 
குறைத்துக் கொள்ளுங்கள்...
உண்மையில் அவர்கள் 
உங்களிடம் இருக்கும் 
கொஞ்சம் நஞ்சம் உள்ள நேர்மறை எண்ணங்களையும் குறைத்து 
உங்களை சோர்வடைய செய்து விடுவார்கள்...
இறைவனின் பூரண அனுகிரகம் 
உள்ளவர்கள் எது விசயமாகவும் எதற்காக 
பயம் கொள்ள வேண்டும்??
#இளையவேணிகிருஷ்ணா.
#இரவு சிந்தனை 🍁.
நாள் 21/07/24.
ஞாயிற்றுக்கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா #guru_purnima
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

White அமைதிகள் எப்போதும் 
தோற்பதும் இல்லை!
சத்தத்தோடு போராடுவதுமில்லை!
இங்கே ஆயிரம் ஆயிரம் 
சலனங்கள் வரலாம் போகலாம் 
எப்போதும் ஒரு வசீகரத்தோடு 
ராஜ நடை போட்டு 
மனமெனும் வீதியில் உலாவுகிறது அமைதி...
அதை நான் கண்டுக் கொண்டேன் 
அதனோடு மட்டும் பெரும் காதல் செய்து 
உலாவுகிறேன் ஒரு மனதிற்கு பிடித்த 
மெல்லிசையோடு...
✨இளைய வேணி கிருஷ்ணா .
அமைதியும் நானும் 💞
நாள் 20/07/24.

©இளையவேணிகிருஷ்ணா #love_shayari
83a4498e0fce1491a790a45d44bbe636

இளையவேணிகிருஷ்ணா

White ஆயிரம் நதிகள் என்னை சுற்றி 
சலனமுற்று அதிக சத்தத்துடன் 
ஓடிக் கொண்டே இருந்தாலும் 
எந்த ஆராவாரமும் இல்லாமல் 
ஆழ்ந்த பேரமைதியோடு
சஞ்சலம் இல்லாமல் பயணிக்கும் 
அபூர்வ நதி நான்...
#இளையவேணிகிருஷ்ணா...
#நான் நானாக 🔥.
நாள் 20/07/24.

©இளையவேணிகிருஷ்ணா #sad_shayari
loader
Home
Explore
Events
Notification
Profile