Nojoto: Largest Storytelling Platform
ramachandran4959
  • 7Stories
  • 12Followers
  • 66Love
    0Views

Ramachandran

  • Popular
  • Latest
  • Video
bbdd54ccf119f6054483cab07c6a5b82

Ramachandran

மகாராஜாவின் ஏழை சகோதரர் | Poor Brother Of King | Tamil Interesting Story

பிரித்திவிராஜ் மகாராஜா தர்ம குணமும் இரக்க குணமும் உள்ளவர். பண்டிதர்களுக்கும், புத்திசாலிகளுக்கும் அவருடைய சபையில் எப்போதும் தனி மரியாதை உண்டு.

ஒரு நாள் ஒரு வயதான பிச்சைக்காரர் அவருடைய அரசவையை தேடி வந்தார். “எங்கே போகிறாய் அங்கேயே நில்” என்று சிப்பாய்கள் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த பிச்சைக்காரர் சொன்னார், “அப்படி எல்லாம் என்னிடம் பேசாதீர்கள், நான்தான் மகாராஜாவின் சகோதரன்” என்றார்.

“என்ன நீ மகாராஜா உடைய சகோதரனா? மகாராஜாவிற்கு சகோதரர் யாருமில்லை. கோட்டைக்குள் வந்து உன்னை பிச்சை எடுக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.” என்றார்கள் அந்த சிப்பாய்கள்.

அப்போது அந்த பிச்சைக்காரர் சொன்னார், “இல்லை நான் பொய் சொல்லவில்லை. உங்களுடைய மகாராஜாவிடம் உங்கள் சகோதரர் வந்திருக்கிறார் என்று கூறுங்கள்” என்றார்.

அவரது சிப்பாய்கள் மகாராஜாவிடம் சென்று “மகாராஜா நம் கோட்டைக்கு ஒரு பிச்சைகாரர் வந்திருக்கிறார். அவர் உங்களுடைய சகோதரர், உங்களை சந்திக்க வேண்டும் என்று கூறுகிறார்” என்று சொன்னார்கள். 



மகாராஜாவும் “சரி, அவரை உள்ளே வரச் சொல்” என்றார்.  சிப்பாய்கள் அவரிடம், “சரி மகாராஜா உன்னை சந்திக்க வேண்டுமாம் உள்ளே செல்” என்றார். அந்த  மகாராஜா பிச்சைக்காரரிடம், “வணக்கம் என்னுடைய சகோதரர் பிச்சைக்காரரே எப்படி இருக்கிறீர்கள்” என்று கேட்டார்.

அப்போது அந்த பிச்சைக்காரர், மகாராஜாவிடம் “மகாராஜா நான் எந்த நல்ல செய்தியுடன் வரவில்லை. என்னிடம் முப்பத்தி இரண்டு வேலைக்காரர்கள் இருந்தனர் இப்போது அவர்கள் எல்லாம் சென்று விட்டனர். எனக்கு ஐந்து மகாராணிகள் இருந்தனர், அவர்களும் வயதானதால் சென்றுவிட்டனர்” என்றார்.

அப்போது மகாராஜா, “இவருக்கு ஐம்பது பொற்காசுகளை கொடுத்து அனுப்புங்கள்” என்றார். அதற்கு அந்த பிச்சைக்காரர், “ஐம்பது பொற்காசுகள் தானா.. அது எனக்கு பத்தாது” என்றார்.

அதற்கு மகாராஜா, “இங்கே பாருங்கள் பிச்சைக்கார சகோதரரே எங்கள் ராஜ்யத்தில் இப்போது போதுமான செல்வம் இல்லை. எனவே வேண்டும் என்றால் இந்த ஐம்பது பொற்காசுகளை எடுத்துச் செல்லுங்கள்” என்றார்.

அதற்கு அந்த பிச்சைக்காரர் சொன்னார், “அப்படி என்றால் நீங்கள் என் கூட வரலாமே. ஏழு கடல் தாண்டினால் தங்க மணல் கொட்டிக் கிடக்கிற இடம் ஒன்று உள்ளது. அந்த தங்க மணலை நீங்க எடுத்திட்டு வந்து உங்க சொத்தா வச்சுக்கலாம்” என்றார்.



“ஆனா ஏழு கடல் தாண்டி நான் எப்படி வருவது சொல்லுங்க” அப்படிக் கேட்டார் மகாராஜா. அதற்கு அவர் சொன்னார், “நீங்க என் கால்ல இருக்க மாயாஜாலத்தை பாருங்க. நான் எங்கே கால் வைத்தாலும் சரி, அது கடலாக கூட இருந்தாலும் அந்த இடம் வற்றி போய்விடும்”.

உடனே மகாராஜா மந்திரியாரிடம், “மந்திரியாரே அவருக்கு ஐந்நூறு பொற்காசுகளை எடுத்துக் கொடுங்கள்” என்றார். மந்திரியார் மகாராஜாவிடம் “மகாராஜா நீங்க சொல்றது எனக்கு எதுவும் புரியல. எதுக்காக இப்போ அவருக்கு ஐந்நூறு பொற்காசுகள் கொடுக்க சொன்னீர்கள்” என்று கேட்டார்.

அதற்கு மகாராஜா சொன்னார், “பிச்சைக்காரர் புத்திசாலிதான். ஆனால் பாவம் துரதிர்ஷ்டசாலி கூட. பொற்காசுக்கு இரண்டு பக்கம் உள்ளது ஒரு பக்கம் ராஜா இன்னொரு பக்கம் பிச்சைக்காரர். ஒரு நாள் நீ மகாராஜாவாக இருக்கலாம் ஆனால் இன்னொரு நாள் பிச்சைக்காரராக கூட மாறி விடலாம். 

அவருடைய குரலை கேட்டாலே அவருடைய நிலைமை புரிகிறது. அவர் சொன்ன முப்பத்திரண்டு வேலைக்காரர்கள் அவருடைய பற்கள் தான். அவர் சொன்ன ஐந்து மனைவிகள் அவருடைய ஐந்து புலன்கள். அவர் எந்தக் கடலில் கால் வைத்தாலும் அந்த கடல் வற்றி போகும் என்று சொன்னாரே. அதே போல தான் நம்ம ராஜ்யத்தில் கால் வைத்தார் நம்முடைய செல்வமும் வற்றிப் போய்விட்டது”. இதை கேட்ட மந்திரி மகாராஜாவின் பதிலை கேட்டு ஆச்சரியப்பட்டார். 

நீதி : ஒரு மனிதன் தன் வாழ்நாளில் கற்றுக்கொள்வது அவனுடைய கடைசி நாட்களில் பயன்படும்.

©Ramachandran
  #janmashtami
bbdd54ccf119f6054483cab07c6a5b82

Ramachandran

தவளைகளின் சரியான முடிவு | தமிழ் கதைகள் | Right Decision Of The Frogs | Story In Tamil With Moral

ஒரு காட்டில் இரு தவளைகள் வாழ்ந்து வந்தன. எந்த ஒரு கவலையும் இல்லாமல் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். சில நாட்களுக்கு பிறகு வெயில் அதிகமானதால் காட்டில் வெப்பம் அதிகமானது.

அதோடு கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வாழ்ந்து வந்த குளத்திலும் தண்ணீர் வற்ற ஆரம்பித்தது. அப்போது ஒரு தவளை சொன்னது அக்கா, “வெப்பத்தினால் குளத்திலிருந்த எல்லாத் தண்ணீரும் வற்றிவிட்டது. நாம் இருவரும் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் தண்ணீர் இருக்கும் இன்னொரு இடத்திற்கு சென்று தான் ஆக வேண்டும் இல்லை என்றால் நாம் இருவரும் இறந்து விடுவோம்” என்றது.

மற்றொரு தவளையும், “ஆம் நீ சொல்வது சரிதான் நாம் தண்ணீர் இருக்கும் இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டும்” என்றது. அவர்கள் இருவரும் வேறு இடத்தை தேடி பயணித்தார்கள். செல்லும் வழியில் ஒரு தவளை அங்கே ஒரு கிணறு இருப்பதைக் கண்டு சந்தோஷப்பட்டது. “இங்க பாருங்க அக்கா நம்ம ஒரு தண்ணீர் இருக்கும் கிணற்றை கண்டுபிடித்து விட்டோம்” என்றது.



அந்தக் கிணறு மிகவும் ஆழமாக இருந்தது. அப்போது அந்தத் தவளை மற்றொரு தவளையிடம், “என்ன பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? நாம் தண்ணீர் இருக்கும் பெரிய கிணற்றை கண்டுபிடித்து உள்ளோம். இருவரும் அந்த கிணற்றுக்குள்ளே குதிக்கலாம்” என்றது.

அதற்கு மற்றொரு தவளை, “இல்லை நாம் அவசரப்படவேண்டாம் இந்த கிணறு மிகவும் ஆழமாக உள்ளது. நாம் வாழ்ந்து கொண்டிருந்த அவ்வளவு பெரிய குளமே வெப்பத்தில் வற்றி உள்ளது .இந்த ஆழமான கிணறு வற்றி விட்டால் நம்மால் அதில் இருந்து வெளியே வர முடியாது, எனவே சிறிது தூரம் பயணிக்கலாம் கண்டிப்பாக இன்னொரு குளத்தை நம்மால் கண்டுபிடிக்க இயலும்” என்றது.

அவர்கள் இருவரும் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். சிறிது தூரம் சென்ற பிறகு ஒரு அழகான பெரிய குளத்தை கண்டனர். இருவரும் மகிழ்ச்சியில் அந்த குளத்திற்குள் குதித்தனர், சந்தோஷமாக பாடி மகிழ்ந்தனர். இருவரும் அந்த குளத்தை தங்கள் வீடாக நினைத்து வாழ ஆரம்பித்தனர்.



சில நாட்களுக்கு பிறகு அங்கே ஒரு மான் அந்த குளத்திற்கு தண்ணீர் குடிக்க வந்தது. அப்போது அது வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தது “எல்லா இடத்திலும் தண்ணீர் வற்றி விட்டன அருகிலுள்ள பெரிய கிணற்றில் இருந்த தண்ணீர் கூட வற்றி விட்டது” என்றது.

இதைக் கேட்ட தவளைகள் நல்லவேளை நாம் அந்தக் கிணற்றுக்குள் குதிக்காமல் விட்டோம். குதித்து இருந்தோமென்றால் நாம் அங்கேயே இறந்திருப்போம் என்றனர்.

நீத: ஒரு செயலை செய்வதற்கு முன்பு நன்றாக யோசித்து செய்ய வேண்டும்.

©Ramachandran
  frog
bbdd54ccf119f6054483cab07c6a5b82

Ramachandran

fraud company

fraud company #சமூகம்

bbdd54ccf119f6054483cab07c6a5b82

Ramachandran

happy independent day

happy independent day #சமூகம்

bbdd54ccf119f6054483cab07c6a5b82

Ramachandran

happy onam
bbdd54ccf119f6054483cab07c6a5b82

Ramachandran

யாரையும் எளிதாக நம்ப வேண்டாம் – Don’t Trust Anyone Blindly | Tamil Short Stories For Kids

மார்ட்டின் என்கிற ஒரு மனிதர் ஊர் ஊராக சென்று இசை வாசிப்பவர். அவர் ஒவ்வொரு ஊராக சென்று  தன் இசை திறமையை மக்களுக்கு காட்டுவார். அவர்களும் இவருக்கு காசு கொடுப்பார்.

மார்ட்டின் எப்போதும் அந்த பணத்தை எல்லாம் தன்னுடைய பையில் போட்டு வைத்திருப்பார். அந்தப் பையை எப்போதும் அவர் தோளில் தான் இருக்கும். ஒருநாள் மார்ட்டின் தன் பையில் காசு போடு வதை திருடன் ஒருவன் பார்த்தான். எப்படியாவது அந்த பையை திருட வேண்டும் என்று திட்டம் போட ஆரம்பித்தான்.

ஒரு நாள் அந்தத் திருடன் மார்ட்டினிடம் சென்று “ஹலோ மார்ட்டின் நான் உங்களோட இசைக்கு அடிமை. உங்களுக்காக  வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.” என்றான்.



அதற்கு அந்த மார்ட்டின் சொன்னார், “இல்லை உன்னை வேலைக்கு வைத்து உனக்கு சம்பளம் கொடுக்க என்னிடம் காசு இல்லை” என்றார். அதற்கு அந்த திருடன் “இல்லை எனக்கு காசு எதுவும் வேண்டாம் நான் உங்களுக்கு வேலை செய்ய ஆசைப்படுகிறேன்” என்றான். 

அதற்கு மார்ட்டின் சம்மதித்தார். அவர் அந்த திருடனிடம் எல்லா பொருட்களையும் எடுத்துக் கொண்டு வரச் சொல்வார். ஆனால் எப்போதும் தன் பணப்பையை தன்னிடமே வைத்திருந்தார். அந்தத் திருடன் பணப்பையை திருட மிகவும் முயற்சி செய்தான் ஆனால் அவனால் அது முடியவில்லை.

ஒருநாள் இருவரும் நடந்து சென்று கொண்டிருக்கும்போது மகாராஜா வருவதை மார்டின் பார்த்து, அந்த திருடனிடம், “நான் மகாராஜாவுக்கு ஒரு இசை வாசிக்கப் போகிறேன் என்னுடைய இசையைக் கேட்டு அவர் எனக்கு நிறைய காசு கொடுப்பார்” என்றார்.

அந்தத் திருடன் மார்ட்டினிடம் சொன்னான், “ஆமாம் உங்களுடைய இசையை கேட்டால் மகாராஜா நிறையவே காசு கொடுப்பார். அதற்கு நீங்கள் ஏழை போல சென்று இசை வாசிக்கவேண்டும். உங்களிடம் இருக்கும் பையை என்னிடத்தில் கொடுத்துவிடுங்கள். உங்களிடம் அந்த பை இருப்பதை பார்த்தால் மகாராஜா அதில் நிறைய காசு இருக்கும் என்று நினைத்து விடுவார்” என்றான்.



மார்ட்டினும் அந்தத் திருடன் பேச்சை நம்பி பையை அவனிடம் கொடுத்துவிட்டு மகாராஜா முன்பு சென்று மகாராஜா, “நான் உங்களுக்கு ஒரு அழகான இசையை வாசிக்கப் போகிறேன்” என்று தன் இசையை வாசிக்க ஆரம்பித்தார். 

அதை முடித்த பிறகு மகாராஜா சொன்னார், “உன் இசை கேட்க மிகவும் நன்றாக உள்ளது இப்போது எனக்கு நிறைய வேலைகள் உள்ளது” என்று கூறினார். மகாராஜா தனக்கு எந்த காசும் கொடுக்காததை எண்ணி ஏமாற்றத்துடன் திரும்பிய மார்ட்டினுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

அந்த திருடன் தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு  தன்னை ஏமாற்றிவிட்டு தப்பி ஓடுவதைப் பார்த்தார். அப்போதுதான் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது புரிந்தது. அவரால் அவனை பிடிக்க முடியவில்லை. 

அவர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த காசை இழந்ததை நினைத்து மிகவும் வருத்தமுற்றார். அப்போதுதான் அவர் முடிவெடுத்தார் இனிமேல் முன் பின் தெரியாத யாரையும் நம்பவே கூடாது என்று.

©Ramachandran
  yaraiyum nambathe
bbdd54ccf119f6054483cab07c6a5b82

Ramachandran

ஒரு ஊரில் விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு பென்னி என்கிற கழுதை ஒன்று இருந்தது. 

அந்தப் பென்னி ஒருபோதும் விவசாயி பேச்சை கேட்காது. அவர் அதனுடைய நல்லதுக்கு என்று சொன்னாலும் அது அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காது.

ஒரு நாள் விவசாயி தன் வேலை விஷயமாக மலை உச்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. அவர் தன்னுடன் பென்னியை அழைத்துக்கொண்டு சென்றார். மேலே மலை உச்சிக்கு சென்ற பிறகு பென்னி விவசாயிடம் சொன்னது, “நான் இங்கு ஏறி வர எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? ஆனால் கீழே செல்வது மிகவும் எளிதாகத் தான் இருக்கும்,” என்று சொன்னது. 



அவர்கள் இருவரும் தங்கள் வேலையை முடித்துவிட்டு கீழே திரும்பி செல்லும்போது அவர்கள் பாதை மிகவும் பள்ளமாக இருந்தது. அப்போது அந்த விவசாயி சொன்னார்,”இங்கு இருந்து செல்லாமல் வேறு ஏதாவது வழியாக செல்லலாம்” என்று. ஆனால் பென்னி அவர் பேச்சைக் கேட்காமல் “இந்த பாதை பார்க்க தான் பள்ளமாக இருக்கிறது, ஆனால் இந்த வழியாக செல்ல எளிதாகத்தான் இருக்கும்” என்றது. 

ஆனால் விவசாயி சொன்னார், “இல்லை நான் இந்த வழியாக வரப்போவதில்லை நிச்சயமாக கீழே நிலை தடுமாறி விழ நேரிடும், எனவே வேறு வழியாக செல்லலாம்” என்றார். 

அவர் பேச்சை கேட்காமல் அது சொன்னது, “இங்கு  பச்சைப்பசேலாக இருக்கிறது, எனவே நான் இங்கிருந்து கீழே குதிக்க போகிறேன்” என்றது.  விவசாயி சொன்னார், “நான் வேறு வழியாக செல்கிறேன், நீ உன் விருப்பப்படி செய்” என்றார். 



விவசாயி வேறு வழியாக பயணிக்க ஆரம்பித்தார். அந்த பென்னி மேல் இருந்து கீழே குதித்தது. கீழே ஒரு வைக்கோல் கூட்டம் இருந்தது, நல்லவேளையாக அதில் விழுந்ததால் உயிருக்கு எந்த ஆபத்தும் வரவில்லை. ஆனால் உடல் முழுவதும் பலமாக அடிபட்டது. 

அப்போதுதான் அது உணர்ந்தது, “முதலாளி எது செய்தாலும் அது என் நல்லதுக்காக தான் இருக்கும். நான் தான் ஒருபோதும் அவர் பேச்சைக் கேட்காமல் நடந்துகொண்டேன்”.

இப்போதும் அவர் பேச்சைக் கேட்காமல் குதித்து எனக்கு இந்த நிலைமை ஆகிவிட்டது. எனவே இனியாவது அவர் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்று முடிவெடுத்தது. அன்று முதல் விவசாயி என்ன சொன்னாலும் அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அதன்படி நடந்து கொண்டது.

நீதி:

ஒருவர் நம் நன்மைக்கு சொல்லும் அறிவுரையை ஏற்றுக் கொள்ள வேண்டும்

©Ramachandran
  #janmashtami kaluthai


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile