Find the Latest Status about the celebrated jumping frog of calaveras county from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, the celebrated jumping frog of calaveras county.
Ramachandran
தவளைகளின் சரியான முடிவு | தமிழ் கதைகள் | Right Decision Of The Frogs | Story In Tamil With Moral ஒரு காட்டில் இரு தவளைகள் வாழ்ந்து வந்தன. எந்த ஒரு கவலையும் இல்லாமல் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். சில நாட்களுக்கு பிறகு வெயில் அதிகமானதால் காட்டில் வெப்பம் அதிகமானது. அதோடு கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வாழ்ந்து வந்த குளத்திலும் தண்ணீர் வற்ற ஆரம்பித்தது. அப்போது ஒரு தவளை சொன்னது அக்கா, “வெப்பத்தினால் குளத்திலிருந்த எல்லாத் தண்ணீரும் வற்றிவிட்டது. நாம் இருவரும் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் தண்ணீர் இருக்கும் இன்னொரு இடத்திற்கு சென்று தான் ஆக வேண்டும் இல்லை என்றால் நாம் இருவரும் இறந்து விடுவோம்” என்றது. மற்றொரு தவளையும், “ஆம் நீ சொல்வது சரிதான் நாம் தண்ணீர் இருக்கும் இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டும்” என்றது. அவர்கள் இருவரும் வேறு இடத்தை தேடி பயணித்தார்கள். செல்லும் வழியில் ஒரு தவளை அங்கே ஒரு கிணறு இருப்பதைக் கண்டு சந்தோஷப்பட்டது. “இங்க பாருங்க அக்கா நம்ம ஒரு தண்ணீர் இருக்கும் கிணற்றை கண்டுபிடித்து விட்டோம்” என்றது.  அந்தக் கிணறு மிகவும் ஆழமாக இருந்தது. அப்போது அந்தத் தவளை மற்றொரு தவளையிடம், “என்ன பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? நாம் தண்ணீர் இருக்கும் பெரிய கிணற்றை கண்டுபிடித்து உள்ளோம். இருவரும் அந்த கிணற்றுக்குள்ளே குதிக்கலாம்” என்றது. அதற்கு மற்றொரு தவளை, “இல்லை நாம் அவசரப்படவேண்டாம் இந்த கிணறு மிகவும் ஆழமாக உள்ளது. நாம் வாழ்ந்து கொண்டிருந்த அவ்வளவு பெரிய குளமே வெப்பத்தில் வற்றி உள்ளது .இந்த ஆழமான கிணறு வற்றி விட்டால் நம்மால் அதில் இருந்து வெளியே வர முடியாது, எனவே சிறிது தூரம் பயணிக்கலாம் கண்டிப்பாக இன்னொரு குளத்தை நம்மால் கண்டுபிடிக்க இயலும்” என்றது. அவர்கள் இருவரும் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். சிறிது தூரம் சென்ற பிறகு ஒரு அழகான பெரிய குளத்தை கண்டனர். இருவரும் மகிழ்ச்சியில் அந்த குளத்திற்குள் குதித்தனர், சந்தோஷமாக பாடி மகிழ்ந்தனர். இருவரும் அந்த குளத்தை தங்கள் வீடாக நினைத்து வாழ ஆரம்பித்தனர்.  சில நாட்களுக்கு பிறகு அங்கே ஒரு மான் அந்த குளத்திற்கு தண்ணீர் குடிக்க வந்தது. அப்போது அது வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தது “எல்லா இடத்திலும் தண்ணீர் வற்றி விட்டன அருகிலுள்ள பெரிய கிணற்றில் இருந்த தண்ணீர் கூட வற்றி விட்டது” என்றது. இதைக் கேட்ட தவளைகள் நல்லவேளை நாம் அந்தக் கிணற்றுக்குள் குதிக்காமல் விட்டோம். குதித்து இருந்தோமென்றால் நாம் அங்கேயே இறந்திருப்போம் என்றனர். நீத: ஒரு செயலை செய்வதற்கு முன்பு நன்றாக யோசித்து செய்ய வேண்டும். ©Ramachandran frog
frog
read more