Find the Best கவி_சிறகுகள் Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos aboutமேடை பேச்சு கவிதைகள்,
Andaman Tamizhachi (P.Uma Maheswari)
White ஆகாயத்தை பார்க்கின்ற போதெல்லாம் அந்த பறவைகளின் இறகினை களவாடி சிறகு தரித்து பறக்க நினைக்கிறேன்! உயிர் பிரிந்தால் காற்றில் கலந்து பறக்குமாம்! நான் உயிர் கொண்டு பறக்க துடிக்கிறேன்!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #milan_night #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம்#
#milan_night #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம்#
read moreAndaman Tamizhachi (P.Uma Maheswari)
நன்மையும் தீமையும்...!! விதைத்தது எதுவாயினும் விளைந்திடத் தானே செய்யும் அது விதையானாலும் சரி வினையென்றாலும் சரி! பிறரால் ஏது நிகழாது உன் செயலே அதன் பயன்! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #SunSet #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம்#காதல்#வாழ்கை
#SunSet #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம்#காதல்#வாழ்கை
read moreAndaman Tamizhachi (P.Uma Maheswari)
கவிதை ✏️..எழுத...!! பெண்பிள்ளை அதிகம் பேசக்கூடாது என்ற அரசாணைக்குள் அகப்பட்ட கைதியாய் ஜித்தன் சிறைக்குள் சிக்கியிருந்த பருவத்தில் பேச முடியாது போன வார்த்தைகளை பேனா முனைக்கு தூதனுப்பி என் இயலாமை இன்னல்களை எல்லாம் காகிதத்தில் பதியம் போட்ட இளவயது சிநேகிதி என் கவிதை காதலி! ஆற்றாமையில் சிந்தாத கண்ணீரின் சிதறாத வலிகளை வரிகளாக்கி உடலற்ற உருவமாய் உள்ளமதில் உறவாகிப் போனது! வலிகளுக்கு வந்த கவிதைகள் எல்லாம் வாழ்க்கைக்கும் வழித் துணையாய் இன்றுவரை என்னோடு பயணிக்கிறது!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #Exploration #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #தகவல்கள் #வாழ்க்கை
#Exploration #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #தகவல்கள் #வாழ்க்கை
read moreAndaman Tamizhachi (P.Uma Maheswari)
நலமாக இருக்கிறேன் என்று...! காரணம் தேடி கை விட்டவர்கள் கஷ்டப்பட வேண்டாம்:-நான் நஷ்டப்பட்டு போய் விடுவேன் என்று! நலமுடன் தான் இருக்கிறேன்! அங்கும் இதையே வேண்டுகிறேன்! விரோதம் பாவிப்பதற்கு.. குரோதம் பழகவில்லை அதனால்.. துரோகம் செய்வதில்லை நானும்! விரும்பியது விரும்பியதாகவே இருந்துவிட்டு போகட்டும்: தோற்றுப்போனதாய் எண்ணிக் கொள்ளவில்லை; இனிவரும் நாட்களில் என் ஏற்றத்தில் யாரும் தோற்றதை ஏற்றுக்கொள்ளும் இடையூறு நிகழாதிருப்பதே... என் நீடு நெடிய பிராத்தனை!! இவள்.... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #delicate #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #வாழ்க்கை #தகவல்கள்
#delicate #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #வாழ்க்கை #தகவல்கள்
read moreAndaman Tamizhachi (P.Uma Maheswari)
இடம் பொருள் பார்த்து...!!! இடம் புறம் பொருள் பார்த்து .. இசை தட்ட இணங்கி போகின்றவர்களுக்கு.. இலகுவாக எதுவும் வசப்பட்டுத் தான் போகிறது! இறுகிப் போய் கிடப்பவர்கள் எல்லாம் இதயம் துடித்த படி இடித்துத்துரைத்து வழி நடத்தி செல்பவர்களுக்கு மட்டும் தான்!! இவள்... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதை #தமிழால்_இணைவோம் #வாழ்க்கை #
#கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதை #தமிழால்_இணைவோம் #வாழ்க்கை #
read moreAndaman Tamizhachi (P.Uma Maheswari)
எங்கோ இருந்தாலும்...!! எங்கோ இருக்கிறாய் என்னை வதைக்கிறாய்! எண்ண அலைகளால் என்னை சுழற்றி அடிக்கிறாய்! யாரோ நீ யாத்திரை சிநேகிதன் போல் யாசக சாரலை விழிகளில் ஒட்டிப் போனது! நெடுஞ்சாலை பயணம் போல் நீளும் நினைவுகளை சாலையோர பூக்களைப் போல் சத்தமின்றி சருகுகளாகி சாந்தம் கொள்ளும் சந்தர்ப்பங்கள் சங்கமிக்கும் போதெல்லாம் இந்த நெடுஞ்சாலையில் என் ஜன்னலோரப் பயணம்!! இவள்.... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #agni #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #வாழ்க்கை #காதல் #காதல்கவிதை
#agni #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #வாழ்க்கை #காதல் #காதல்கவிதை
read moreAndaman Tamizhachi (P.Uma Maheswari)
கடைசி வரை...!! ஒரு படைப்பாளியின் படைப்புகள் பாராட்ட படவில்லை என்றால்... .பருவ மழைக் காணாத விளைநிலங்களின் விரிசலுக்குள் விழுந்து போன புல்லாங்குழல் போலாகும்! மீட்டினால் தானே ஒலி கேட்கும்? படைப்பாளிகளும் அப்படித் தான்! அஃது இல்லாது போனால் வீதியோரம் விற்கும் கரிம பழங்களை காசு கொடுத்து வாங்க பேரம் பேசும் நாம் பல்பொருள் அங்காடியின் குளிர்பதன பெட்டியில் பளபளக்கும் பழங்களுக்கு விலை கொடுத்து வாங்கி பெருமிதம் கொள்வது போல் தானே பொருள் பெறும்!! இவள்.... அந்தமான் தமிழச்சி!! ©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #chai #கவிதை , #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #காதல் #காதலியம் #கண்ணீர் #வலி
#chai #கவிதை , #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #காதல் #காதலியம் #கண்ணீர் #வலி
read moreBALA CREATOR
மீண்டும் ஞாபகப்படுத்த விரும்பாத ஒன்று. மறக்க மறுக்கும் ஒன்றாகவும் இருக்கிறது.! ©Balaji #கவி_சிறகுகள்
#கவி_சிறகுகள்
read moreAndaman Tamizhachi (P.Uma Maheswari)
#romance #கவி_வனம் #கவிதை_பலகை #கவி_சிறகுகள் #வாழ்க்கை #வலி #பயணம் #தமிழ் #தமிழ்ப்பக்கம்
read more