Find the Best கிறுக்கல்_சா_வி Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos about
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
இம்சிக்கும் உன் நினைவுகளை எல்லாம் பிரித்தெடுத்து வைத்தேன் அருகில் அமர்ந்து அன்பாய் பேசி மீண்டும் புதிதாய் என்னில் பிறந்து மழலை போல் ஆட்டமாடி ரசிக்கும் கணங்களாய் கட்டிப்போட்டுவிடுகிறது....! #கிறுக்கல்_சா_வி
#கிறுக்கல்_சா_வி
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
அகழி போல் அரணாய் ஆழி கிணற்றின் ஆழமாய் இனிமை விளைந்திட ஈரம் சேர்க்கும் ஏரியாய் உயிர் பருகும் இனிய ஊருணியாய் எங்கும் எழும் ஊற்றாயிருந்தே ஏற்றம் ஏந்த செய்து சிந்திய ஐயங்களை சிதறியோடவிட்டு ஒளிர ஒலிக்கும் அருவியாய் ஓடுகின்ற ஆற்றாய் ஒளதசியமாய் மாற்றியே பௌவமான உன் அன்பில் என்னை மிதக்க செய்கிறாய் என் உயிரே ...! #கிறுக்கல்_சா_வி #அ_ஒள_ஃ 41
#கிறுக்கல்_சா_வி #அ_ஒள_ஃ 41
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
கால கிழிச்சிட போகுது பார்த்து போ... அங்கே கண்ணாடி உடஞ்சி இருக்கு... அங்கே பொறி வச்சிருக்க பார்த்து போ... சரக்கு அடிச்சிட்டு தூக்கி எறிஞ்ச தெய்வமே... வேற ஏதோ பிடிக்க வச்ச மகராசா... நீ பார்த்து போய்டுவ சரி... அந்த பக்கமா போற பிராணிக்கு எல்லாம் தெரியாது பட்டா குத்தி கிழியும்னு மாட்டுனா வெடி வெடிக்குமோ உயிர் போற வலி வரும்னு ஆறறிவு பட்டம் வாங்குன அறிவுகொழுந்தே பார்த்துட்டு ஒதுங்கி போகாம யாருக்கும் கஷ்ட படாதமாறி அப்புறப்படுத்து.. ஏன்ன உன்ன மாறி ஒரு மனுஷன் தான் கண்டபடி வீசி எறிஞ்சிட்டு போனா... ஏன் நீயா கூட இருக்கலாம் தான்.. ~உடைந்த உயிர் குருதியின் அழுகை ஓலம் கால கிழிச்சிட போகுது பார்த்து போ... அங்கே கண்ணாடி உடஞ்சி இருக்கு... அங்கே பொறி வச்சிருக்க பார்த்து போ... சரக்கு அடிச்சிட்டு தூக்கி
கால கிழிச்சிட போகுது பார்த்து போ... அங்கே கண்ணாடி உடஞ்சி இருக்கு... அங்கே பொறி வச்சிருக்க பார்த்து போ... சரக்கு அடிச்சிட்டு தூக்கி
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
ஏய் எங்க போன நீயும்.... 👇👇👇 என் பக்கத்து வீட்டு பொண்ணே எனக்கு பிடிச்ச கருவாச்சியே .. என் சினேகிதியே படு சுட்டியான வாலு மணியே
என் பக்கத்து வீட்டு பொண்ணே எனக்கு பிடிச்ச கருவாச்சியே .. என் சினேகிதியே படு சுட்டியான வாலு மணியே
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
நாம் சரியென செய்தது மற்றவர்க்கு தவறாய் தெரிய அதுவே குறைகள் கோவம் என இதுவரை மனதில் நினைத்து மறைத்த அவரவர் எதிர்மறை எண்ணங்களை எல்லாம் திறந்திடும் சாவியாகி அனைவர் பற்றியும் அறியவும் செய்கிறது....! #கிறுக்கல்_சா_வி
#கிறுக்கல்_சா_வி
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
சொல்லாமல் நீ மறைத்தாலும் மனதில் புதைத்ததை சொல்லிவிடும் நீயறிந்த ஒற்றர்களாய், உணர்த்தியும்விடும் திறந்த புத்தகமாய் உன் விழிகள் எனக்கு ...! #கிறுக்கல்_சா_வி
#கிறுக்கல்_சா_வி
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
ஒவ்வொருவர்க்கும் வாழும் சூழலும் அனுபவமும் ஒரே மாதிரி இருப்பதுமில்லை பிறகு செயலின் விடை மட்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்...! ஒப்பீடு சொல்பவர்கள் நிறைகளை பார்ப்பதுமில்லை கேட்பவர்க்கு நினைவில் ஏதோ ஒரு சுமையை அமர்த்திய நினைவை அளித்தும் விடுகிறார்கள் ...! #கிறுக்கல்_சா_வி
#கிறுக்கல்_சா_வி
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
நான் தான்.... (வரிகள் கீழே) விழிகளில் குத்திய முள்களாய் இடர்தந்து தீண்டுவதும் உயிரை ஆழ குடைந்ததில் புடைத்த குருதியையும் நீராய் ருசிப்பதும் சிதறிய மெய் துகள்களில் சாக்கடையாய் மாற்றுவதும்
விழிகளில் குத்திய முள்களாய் இடர்தந்து தீண்டுவதும் உயிரை ஆழ குடைந்ததில் புடைத்த குருதியையும் நீராய் ருசிப்பதும் சிதறிய மெய் துகள்களில் சாக்கடையாய் மாற்றுவதும்
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
அனுமதியின்றி கடத்தப்பட்டாலும் புகார் சொல்ல முடியவில்லை ஆயுளுக்கும் குத்தகை கேட்டாலும் ஏனென்று மறுக்க முடியவில்லை வரவை கொடுத்து விட்டாலும் வட்டியை தடுக்க முடியவில்லை அடைப்பட்டது சிறையில் என்றாலும் சுதந்திரம் கேட்க முடியவில்லை கடத்தியது மனதை குத்தகையானது இதயம் வட்டியாவது நினைவு அனைத்திற்குமாய் சிறைப்படுத்தியது விழிகள் ஆம் அவளே தான்...❤️ #கிறுக்கல்_சா_வி #2650_
#கிறுக்கல்_சா_வி #2650_
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
தினம் ஒரு அத்தியாயம் ரசித்து எழுதப்படுகிறது என் நினைவு ஏட்டில் புதுப்புது ஊடல் காரணங்களை யோசித்து மனதில் சமைத்து பரிமாற காத்திருக்கும் என்னவளால் ....! #கிறுக்கல்_சா_வி
#கிறுக்கல்_சா_வி
read more